‘இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்’ ஹிந்தி குறித்து பதிவிட்ட கமல் குடும்ப நடிகை – (வடிவேலு சொல்ற மாதிரி இல்ல இருக்கு)

0
477
suhashini
- Advertisement -

‘இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும், நாம் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் நடிகை சுகாசினி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என்று கூறியதிலிருந்து இந்த பேச்சு தென்னிந்திய மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் தங்களுடைய மொழியை பெருமைப்படுத்தி கூறி வருகின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு சூழ்நிலையில் ‘விக்ரம் ராணா’ பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் ஹிந்தி குறித்து பேசி இருந்தார். அதில் அவர், இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்கள் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள். அதை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்து வெளியிட்டாலும் வெற்றி பெறுவதில்லை. இன்று நாங்கள் அனைத்து மொழிகளிலும் வெற்றி படத்தை எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இப்படி சுதீப் கூறியிருந்த கருத்து சோஷியல் மீடியாவில் படு வைரலாகி இருந்தது.

- Advertisement -

அஜய் தேவ்கான் பதிவு:

இதனையடுத்து சுதீப்பின் கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கூறி இருந்தது, உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை. அப்போது ஏன் உங்கள் தாய்மொழி படத்தை இந்தியில் டப் செய்கிறீர்கள்? இந்தி படம் எங்களுக்கு தாய்மொழி. இந்தி மொழி தான் தேசிய மொழி என்று கூறி இருந்தார். இப்படி அஜய் தேவ்கான் போட்டிருந்த பதிவு சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருந்தது. பலரும் இது குறித்து கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள்.

கிச்சா சுதீப்பின் பதிலடி:

இதனைத் தொடர்ந்து மீண்டும் கிச்சா சுதீப், அஜய்தேவ் கானுக்கு பதில் டீவ்ட் போட்டிருந்தார். அதில் அவர், நான் அந்த இடத்தில் வேறு ஒரு தோணியில் பேசியிருந்தேன். உங்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அப்படி சொல்லவில்லை. நேரில் சந்திக்கும் போது எந்த நோக்கத்திற்காக அப்படி சொன்னேன் என்பதை விளக்குகிறேன். ஆனால், நீங்கள் இந்தியில் பதிவிட்டு இருந்த இந்த பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். இதே போல ஒரு வேலை நான் எனது தாய் மொழியான கன்னடத்தில் என் பதிலை பதிவு செய்திருந்தார்.

-விளம்பரம்-
Suhasini Maniratnam Shares Maniratnam's Whatsapp Number To Fans

சர்ச்சையாகும் ஹிந்தி கருத்து:

உங்கள் நிலைமை என்னவாக இருக்கும்? நாங்களும் இந்தியாவில் தான் இருக்கிறோம் சார் என்று பதிலடி கொடுத்தார். இதை அடுத்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு ஆதரவாக பலரும் அஜய்தேவ்கனை வறுத்தெடுத்து இருந்தனர். இதை அடுத்து பல நடிகர்களும் மாறி மாறி தங்கள் கருத்தை பதிவிட்டு வந்தார்கள். இப்படி இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும், நடிகையுமான சுகாசினி இந்தி குறித்து கருத்து ஒன்று பதிவிட்டிருக்கிறார்.

mani ratnam to release the first look poster of parthiban iravin nizhal |  Galatta

ஹிந்தி குறித்து சுஹாசினி போட்ட பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவருடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி சுகாசினி பதிவிட்டிருந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் பல வகையில் நடிகை சுகாஷினியை விமர்சித்து வருகின்றனர். இதற்கு சுகாசினி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement