சுனைனாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா ? நேரலையில் அவரே சொன்ன விளக்கம்.

0
7643
sunaina
- Advertisement -

தமிழில் நடிகர் நகுல் அறிமுகமான கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பின்னர் மாசிலாமணி, வம்சம், சமர், போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேபோல கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் ஆண்டுதோறும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள சில்லுகருப்பட்டி படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சுனைனா. மேலும், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை சுனைனாவிற்கு திருமணம் முடித்து விட்டது என்ற ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : இளைஞருடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவிகள். இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சுனைனா, தனது சமூக வலைதள பக்கத்தில் ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தது தான். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இவர் தான் உங்கள் காதலரா ? இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா ? என்றெல்லாம் கமன்ட் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகை சுனைனாவிற்கு திருமணமே முடிந்துவிட்டது என்று செய்திகள் பரவியது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய சுனைனாவிடம் ரசிகர்கள் சிலர் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுனைனா, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு திருமணம் என்றால் அதனை நான் முறைபடி அறிவிப்பேன். எனவே, இது போன்ற வதந்திகளை எல்லாம் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-


Advertisement