45 வயதாகியும் திருமணம் பண்ணல..! இந்த நடிகர் தான் காரணம்..! வெளிவந்த உண்மை

0
850
Actress-tabu

சினிமா நடிகைகளை பொறுத்த வரை அவர்களது திருமண வாழ்வில் அவ்வளவாக அக்கறை கொள்வது இல்லை. அதானல் பல நடிகைகளும் 30 வயதிற்கு மேல் தான் திருமணம் குறித்தே யோசிக்கின்றனர். மேலும், ஒரு சில நடிகைகள் காலம் கடந்த வயதிலும் திருமணமாகாமல் சிங்களாக தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை தபு 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார். இவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இந்தி நடிகர் அஜய் தேவ் தான் முக்கிய காரணம் என்றும் அவரால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன் என்றும் சமீபத்தில் நடிகை தபு அளித்த பேட்டி ஒன்றில் குண்டை போட்டுள்ளார்.

இந்தி நடிகையான தபு, தமிழில் 1996 ஆம் ஆண்டு நடிகர் மோகன் லால், நடிகர் பிரபு நடித்த “இருவர்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் “காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தி சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் தபுவிடம் நடிகர் அஜய் தேவ்கன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு தபு கூறியது என்னவெனில்.

Tabu-actress

“எனக்கு அஜய் தேவ்கனை 20 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும், அவர் என்னுடைய உறவினர் சமீரின் நெருங்கிய நண்பர். நான் சிறு வயதாக இருந்த போது அமீர் மற்றும் அஜய் என்னை எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பார்கள். என்னிடம் எந்த பையன் பேசினாலும் அவர்களை அடித்து விடுவார்கள். இவர்கள் இருவர் தான் நான் சிங்கிளாக இருக்க காரணம் ” என்று வேடிக்கையாக தெரிவித்துளளார்.