கொரோனாவால் ஏறிய உடலை குறைத்த தமன்னா – ஜிம் உடையில் கும்முன்னு கொடுத்த போஸ்.

0
1598
tam
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ஆக்ஷன்’. கதையின் நாயகனாக விஷால் நடித்திருந்த இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்டார். மேலும் ,தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாது பாலி விட்டுவிடும் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் தமன்னா.இடைப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘டாங் டாங்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் தமன்னா.

- Advertisement -

சமீபத்தில் நடிகை தமன்னாவின் அம்மா மற்றும் அப்பா இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அவர்களை தொடர்ந்து தமன்னாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிய தமன்னாவிற்கு கொஞ்சம் உடல் எடை கூடியது. இப்படி ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, கொரோனா தொற்றின் போது நான் கடுமையான மருந்துகளை உட்கொண்டேன் , இது எனக்கு உடல் கூடியது. நான் என்னுடைய புகைப்படத்தை பதிவிட்டாலே பலரும் என்னை குண்டு என்று தான் அழைத்தார்கள். ஒருவர் என்ன எதிர்நோக்கி கொண்டு இருக்கிறார் என்பது மற்றவர்கள் பார்ப்பது இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தமன்னா, மீண்டும் உடற் பயிற்சிகளை செய்து உடலை குறைத்துள்ளார். உடற் பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமன்னா, நீங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருநிலையாக இருங்கள். கொரோனாவிற்கு பின் இருந்த உடலை பெற்றுவிட்டேன். உன் மூஞ்சில் அடித்துக்கொள்ள கொரோனா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement