நான் அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.! டாப்ஸி அதிரடி முடிவு.! யார் அந்த நடிகர்.?

0
588
Actress-pannu

தமிழில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி . 2010 இல் தெலுங்கில் வெளியான ‘ஜும்மண்டி’ நாடம் என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த நடிகை டாப்ஸி, அதன் பின்னர் பல மொழி படங்களில் நடித்துவிட்டார்.

actress tapsee pannu

தமிழில் “ஆடுகளம்,வந்தான் வென்றான்,ஆரம்பம், காஞ்சனா,வை ராஜா வை “போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் தெலுகு, மலையாள படங்களில் அம்மணி பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை டாப்ஸி பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்குடன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியது. ஆனால் அந்த தகவலை முற்றிலும் மருத்துளளார் நடிகர் சித்திக்.

சில நாட்களுக்கு முன்னர் ஹனி திரிஹன் என்ற இயக்குனர், நடிகை டாப்ஸியிடன் த்ரில்லர் கதை ஒன்றை கூறியுள்ளார். அந்த படத்தில் நவாஸுதீன் சித்திக் தான் ஹீரோ என்று தெரிந்தவுடன், அவருடன் நான் நடிக்க மாட்டேன் என்று டாப்ஸி கூறியுதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் குறித்து சமீபத்தில் தெளிவுபடுத்திய நடிகர் நவாஸுதீன் சித்திக், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் “நடிகை ஒருவர் என்னுடன் ஒரு த்ரில்லர் படத்தில் ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நான் எந்த ஒரு த்ரில்லர் படத்திலும் நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த தகவல் மிகவும் அடித்தளமில்லாதது.” என்று பதிவிட்டுள்ளார்.