38வது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷா – 1999-ல் திரிஷாவை ‘மிஸ் மெட்ராஸ்’ ஆக்கிய அந்த ஒரு கேள்வி அதற்கு திரிஷா சொன்ன பதில்.

0
2866
trisha
- Advertisement -

தமிழ் திரையுலகில் ‘ஜோடி’ என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். ‘மௌனம் பேசியதே’ படத்துக்கு பிறகு ‘மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி’ போன்ற சில படங்களில் நடித்தார் த்ரிஷா. நடிகை திரிஷா நடிகையாவதற்கு முன்பாக மாடல் அழகி என்பது பலரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-16.jpg

இந்த போட்டியின் கடைசி சுற்றில் `மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’ என்ற கேள்விக்கு த்ரிஷா சொன்ன பதில் – நேர்மை.“எது இல்லையோ. எது தேவைன்னு அந்த கணத்தில் எனக்குத் தோன்றியதோ அதைத்தான் சொன்னேன். நூறு சதவிகித நேர்மையுடன் வாழும் மனிதன் யார் ? ஆனால், அப்படி வாழும் நிமிடங்கள் சந்தோஷமானவை தெரியுமா.” என்று நேர்மையாக வாழ்வது பற்றி கூறியிருந்தார் திரிஷா.

இதையும் பாருங்க : முட்டிக்கு மேல் மாடர்ன் உடை, கையில் ட்ரங்க் பெட்டி – வித்யாசமான லுக்கில் ரித்விகா.

- Advertisement -

மாடல் அழகி பட்டத்தை வென்ற திரிஷா ஜோடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார். இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. மேலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-42.jpg

இன்று (மே 4-ஆம் தேதி) நடிகை த்ரிஷாவின் பிறந்த நாள். ஆகையால், த்ரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#HBDTrisha, #HBDSouthQueenTrisha, #HappyBirthdayTrisha #HBDTrishaKrishnan’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. இதனால் தனது வீட்டிலையே கேக் வெட்டி சிம்பிளாக பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் நடிகை த்ரிஷா.

-விளம்பரம்-
Advertisement