பிரபல நடிகருக்கு தனது வீட்டை விற்ற த்ரிஷா, யார் அந்த நடிகர் தெரியுமா?

0
339
- Advertisement -

பிரபல நடிகை த்ரிஷா தனது வீட்டை விற்று இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா‌. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 40 வயதை கடந்தும், தமிழ் திரையுலகில் சிங்கிளாக வலம் வரும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக விளங்கி வரும் இவர், இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார்.

- Advertisement -

வீட்டை விற்ற த்ரிஷா:

கோலிவுட்ல பல நடிகர் நடிகைகள் சென்னையில் தான் வசித்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் சொந்தமாக பங்களா வீடு வாங்கி வசிக்கிறார்கள். இன்னும் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி அதில் வசித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் சென்னையில் உள்ள ஒரு பிசியான ஏரியாவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பிறகு அவர் அந்த வீட்டை ஒரு பிரபல நடிகருக்கு விற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீட்டை வாங்கிய பிரபலம்:

அதாவது, நடிகை த்ரிஷாவின் வீட்டை நடிகர் பானு சந்தர் வாங்கியுள்ளாராம். நடிகர் பானு சந்தர் தமிழ் திரையுலகில் 80 காலகட்டங்களில் பல படங்களில் நடித்திருந்தார்‌. தற்போது இவர் தெலுங்ல் பல படங்களில் நடித்து வருகிறார். ‘மூடுபனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் படங்களில் குணசித்திர படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் அருண் விஜய் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மை டாக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

த்ரிஷா குறித்து:

தற்போது இவர் த்ரிஷா வசித்து வந்த வீட்டை தான் வாங்கி இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க சமீபகாலமாக நடிகை த்ரிஷா பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் ‘லியோ’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர், தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார்.

த்ரிஷா நடிக்கும் படங்கள்:

இந்தப் பாடலும் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இவர் ‘பிருந்தா’ தெலுங்கு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.அ டுத்து இவர் நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதோடு இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தங் லைப்’ படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவர் தெலுகு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் கமிட்டாகி த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement