திரிஷாவின் 3ம் வகுப்பு ஸ்கூல் ரிப்போர்ட் கார்டை பார்த்துள்ளீர்களா? படிப்பிலும் எப்படி ? வைரலாகும் புகைப்படம்

0
1648
Trisha

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. 1999 ஆம் ஆண்டு பிரசாந்த்– சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் திரிஷா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Abhiyum Naanum - Trisha - Abhiyum Naanum Movie - Indian Bollywood ...

அதோடு இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை திரிஷா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை திரிஷாவின் பள்ளிப் பருவத்தின் ரிப்போர்ட் கார்டு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் தான் படித்து உள்ளார். அவர் படிக்கும் போது வழங்கப்பட்ட மூன்றாம் வகுப்பு பிராக்ரஸ் கார்டு ரிப்போர்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் ரிப்போர்ட் கார்டில் நடிகை திரிஷா அவர்கள் நடிப்பில் நம்பர் ஒன் போல படிப்பிலும் நம்பர் 1 ஆக உள்ளார்.

தற்போது இதனை ரசிகர்கள் அதிகமாக வைரலாகி வருகிறார்கள். தற்போது நடிகை திரிஷா வரலாற்று சிறப்புமிக்க நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குனர் மணிரத்னம்இயக்கி வருகிறார். அதோடு இவர் கர்ஜனை, ராக்கி, போகி, பரமபதம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement