குடி பழக்கத்தால் பிரிந்த முதல் கணவர், 43 வயதில் இரண்டாம் திருமணம் செய்த ஊர்வசி. 44 வயதில் பிறந்த மகன்.

0
1642
oorvasi
- Advertisement -

தன் மகன் குறித்து முதன் முதலில் மனம் திறந்து ஊர்வசி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் ஊர்வசி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஊர்வசி. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் ஊர்வசி இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தார்.

- Advertisement -

ஊர்வசி முதல் கணவர்:

நடிகை ஊர்வசி அவர்கள் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும்(குஞ்சட்டா) இருக்கிறது. எட்டு ஆண்டுகள் தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பின் மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையில் ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பவர் அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது? என கணவர் மனோஜ் குற்றம்சாட்டி இருந்தார்.

ஊர்வசி இரண்டாவது திருமணம்:

பிறகு முடிவில் தன்னுடைய மகள் தந்தை உடனே சென்று விட்டார். அதுமட்டும் இல்லாமல் ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் இறப்பு ஊர்வசியை வெகுவாக பாதித்து இருந்தது. இதனால் ஊர்வசி மன வேதனையில் இருந்தார். தற்போது ஊர்வசி அந்த மனக் காயங்களில் இருந்து மீண்டு வந்து மறுமணம் செய்து குடும்பம்,கேரியர் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஊர்வசி அவர்கள் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

-விளம்பரம்-

ஊர்வசி அளித்த பேட்டி:

ஊர்வசி மிக வயதான நிலையில் மகனை பெற்று எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஊர்வசி பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகன் குறித்து ஊர்வசி அவர்கள் முதன் முறையாக மனம் திறந்து பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய மகன் பெயர் இஷான். அவன் தான் என்னுடைய உலகம். மகன் பிறந்த பிறகு என் வாழ்க்கையை தலைகீழாக மாறிப்போய் விட்டது. அவனோட அழகான முகம் என்னை அப்படியே மாற்றி விட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்.

மகன்-மகள் குறித்து ஊர்வசி கூறியது:

அதிக குழந்தைகள் பெத்துக்கனும் என்று எனக்கு ஆசை. அதனால் தான் இந்த வயதிலேயும் ஒரு மகனுக்கு தாய் ஆகி இருக்கிறேன். இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்து வருகிறேன். அவனை பிரிந்து என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. எங்க சூட்டிங் இருந்தாலும் அவனோடு தான் போவேன். ஆரம்பத்தில் குஞ்சட்டாகூட இப்படித்தான் என் கூடவே இருப்பாள். இப்போ அவ இடத்தில் இவன் இருக்கிறான். அவளுக்கும் தம்பியை ரொம்பப் பிடிக்கும். இஷான்னு பெயர் வைத்ததே அவள்தான். கல்பனா மகள் ஸ்ரீமயி, குஞ்சட்டா இவங்க ரெண்டு பேருதான் இஷானுக்கு நல்ல நண்பர்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement