13 வருட தவம், நடிகை வித்யா பிரதீப்பிற்கு பிறந்த அழகான குழந்தை – அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

0
190
- Advertisement -

நடிகை வித்யா பிரதீப்பிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வித்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டதால் மீடியாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் நடிகை ஆனார்.

-விளம்பரம்-

இவர் அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2 , மாரி 2, பொன்மகள் வந்தாள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் துணை வேடத்தில் நடித்திருந்தாலும் சில படங்களில் இவர் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்த ‘நாயகி’ சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

வித்யா பிரதீப் குறித்த தகவல்:

மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் விஞ்ஞானியும் ஆவார். இது பலருக்கும் தெரியாது. இவர் பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்தார். பின் இவர் சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ஸ்டெம் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் தொடர்ந்து படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

வித்யா திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த சட்டம் என் கையில் என்ற படத்தில் வித்யா பிரதீப் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக சதீஷ் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்தும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணம் ஆனதே பலரும் அறிந்திராத ஒன்று தான்.

-விளம்பரம்-

வித்யா திருமணம்:

அதாவது, 13 வருடங்களுக்கு முன்பே நடிகை வித்யா அவர்கள் மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் பிரதீப் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான் வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
மேலும், இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. சமீபத்தில் தான் வித்யா பிரதீப், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார்.

வித்யா பிரதீப் குழந்தை:

மேலும், இவர் நிறைமாத கர்ப்பிணி ஆக தன்னுடைய கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் நடத்தி இருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகை வித்யா பிரதீப்பிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, வித்யா பிரதீப்புக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது தன் குழந்தையின் புகைப்படத்தை வித்யா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement