தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகளின் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். பிரபு, விஜய், ஜெயம் ரவி, ஜீவா என்று இப்படி நடிகர்களின் லிஸ்ட் நீளம். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். தமிழில் நீதானே என் பொன் வசந்தம், வீரம், வி எஸ் ஓ பி, ஜில்லா, மாஸ் போன்ற பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை வித்யூ ராமன். இவர், தமிழ் சினிமாவில் பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

நீதானே என் பொன் வசந்தம் படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமாவில் நடிக்க ஆரம்பமான நாள் முதலே வித்யூ ராமன் படு குண்டாக தான் இருந்தார். இதனால் அவர் பல்வேறு கிண்டலுக்கும் உள்ளானார். இந்த நிலையில் வித்யூ ராமன் தனது உடல் எடையை குறைக்க கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வந்தார்.

இதனால் முன்பை விட உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். வித்யூ ராமனின் இந்த முயற்சியை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் வித்யூ ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் குண்டாக இருந்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். அதில் தற்போது ஒல்லியாக இருக்கும் வித்யு ராமனை பார்த்து அனைவரும் வியந்து போகினர்.

Advertisement

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வித்யு ராமன் தனது உடல் எடையை குறைத்து பற்றி பேசியுள்ளார். அதில், நான் வாழ்கை முழுவதும் குண்டாக இருந்தேன். ஆனால், நீதானே பொன் வசந்தம் படத்திற்க்கு பின்னர் நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எல்லா படத்திலும் என் உடல் எடையை பற்றித்தான் காமெடி இருந்தது. அதை ரசிகர்களும் ரசித்தார்கள். ஆனால், நான் போன மாசம் வாங்கிய பேண்ட் பத்தாமல் போனது.

Advertisement

அதன் பின்னர் டயட் இருந்தால் தான் உடல் குறைக்க வேண்டும் என்று நினைத்து ஜனவரி மாதம் முடிவு எடுத்தேன். பிப்ரவரி மாதம் உடற் பயற்சி செய்ய துவங்கினேன். ஜூன் மாதம் 15 கிலோ உடல் எடையை குறைத்தேன். மேலும், சினிமாவை என் உடலை வைத்து தான் காமெடி பண்ணிகொண்டே இருந்தார்கள். அது ஒரு கட்டத்தில் எனக்கு சலித்துவிட்டது. பின்னர் ஒரு சிலர் நீ உடல் எடையை குறைத்தால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று சொன்னார்கள்.ஆனால், என் உடலை குறைத்ததால் நான் இப்பொது நன்றாக இருக்கிறேன்.

Advertisement