தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க – தங்கம் வென்றவருக்கு பதிலாக வேறு ஒரு நம்பரின் போட்டோவை போட்ட கமல்.
சினிமா உலகில் நுழையும் போது நடிகை வித்யு லேகா பப்ளியாக தான் இருந்தார். பின் தனது உடல் எடையை குறைத்து பிட்டான உடலில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். சமீபத்தில் தான் இவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இவரது திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு முன் தனது தோழிகளுடன் பேச்சுலர் பார்ட்டியை வைத்து ரிசார்ட்டில் ஜாலியாக இருந்துள்ளார். அவரது கொண்டாட்டத்தில் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியும் இணைந்துள்ளார். மேலும், இந்த நீச்சல் உடையிலும் தனது தோழிகளுடன் கூத்தடித்து உள்ளார் வித்யூ லேகா.