நிச்சயம் முடிந்து ஓராண்டிற்கு பின் சத்தமில்லாமல் திடீர் திருமணம் செய்த நடிகை வித்யுலேகா

0
933
vidhyu
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல நடிகையான வித்யூ லேகாவும் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்துள்ளார்.

-விளம்பரம்-
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா.

இதையும் பாருங்க : ப்பா, பரத் Twins மகன்களா இது ? எப்படி வளந்துட்டாங்க அதுக்குள்ள. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை.

This image has an empty alt attribute; its file name is 1.jpg

இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி இவருக்கு சஞ்சய் என்பவருடன் நித்சயதார்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டு ஆன நிலையில் தற்போது வித்யு லேகா, திடீர் திருமணத்தை முடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement