நடிகை விஜயகுமாரி குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் விஜயகுமாரி. இவர் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். இவருடைய பெயர் மோகனா. இந்த பெயரில் தான் இவர் சினிமாவிலும் அறிமுகமானார். அதற்கு பின் தான் இவருக்கு விஜயகுமாரி என்ற பெயர் மாறியது.
இவர் முதல் முதலாக நால்வர் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடிப்பது மட்டுமில்லாமல் டயலாக் டெலிவரியும் செய்திருந்தார். இதனாலே இவர் சீக்கிரம் ரசிகர்கள் மத்தியில்
ரீச் ஆனார். இதை அடுத்து இவர் முத்துராமன், ஏவிஎம் ராஜன், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், நாகேஷ், எம்.என். நம்பியார், எம்ஜிஆர், ரவிச்சந்திரன், டிஎம் சவுந்தர்ராஜன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார்.
விஜயகுமாரி குறித்த தகவல்:
மேலும், இவர் நடித்த சாரதா, அமுதா, குமுதம், நானும் ஒரு பெண், ஆலயமணி, பாத காணிக்கை, போலீஸ்காரன் மகள், கொடிமலர், பார் மகளே பார், பச்சை விளக்கு, ஆனந்தி, சாந்தி, தாயே உனக்காக, விவசாயி, கணவன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக, இவர் நடித்த பூம்புகார் படம் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டிருந்தது. இந்த படம் இவருடைய கேரியருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம்.
விஜயகுமாரி குடும்பம்:
இப்படி இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே எஸ் எஸ் ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் 1973 ஆண்டு வரை இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வரை தான் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடித்தது. அதற்கு பிறகு இவர் கணவரை பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவரை பிரிந்த பிறகு இவர் தன் மகனை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டார்.
விஜயகுமாரி பேட்டி:
இதற்காக இவருக்கு பல உதவிகளை எம்.ஜி.ஆர் தான் செய்தார். அதோடு இவர் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் கூட நடத்தி வந்தார். கடைசியாக இவர் 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு என்ற படத்தில் தான் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகுமாரி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் கடந்த 50 வருடங்களாக சாப்பாடு சாப்பிடுவதே கிடையாது.
சாப்பாடு முறை:
நாள்தோறும் கடையில் ரெண்டு வேக வைத்த முட்டைகளை தான் சாப்பிடுவேன். தனியா, ஜவ்வரிசி, மிளகு, சீரகம் ஆகியவற்றை கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் அதை குடிப்பேன். மதிய உணவாக ஒரு இட்லி, காய்கறி, மீன் குழம்பு என்று எடுத்துக் கொள்வேன். மதிய உணவிற்கு பிறகு பழங்களை எடுத்துக் கொள்வேன். மாலையில் டீ, பிஸ்கட் சாப்பிடுவேன். இரவு நேரத்தில் ஒரு இட்லி சாப்பிடுவேன். இல்லையென்றால் தோசை சாப்பிடுவேன். 50 வருடங்களாக இதை தான் சாப்பிட்டு வருகிறேன்
என்று கூறியிருக்கிறார்.