கலைஞர் எழுதிய வசனத்தை பேசி எனக்கு தொண்டையில் ரத்தம் வந்தது..! பிரபல நடிகை நெகிழ்ச்சி.!

0
314

தமிழ் சினிமாவின் பெருமைக்குமறிந்த திமுக தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய பங்குண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என வசனத்தை பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!’ என்றது கலைஞரின் வசனம் தொடங்கி . ‘நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி 65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது.

vijaykumari

தமிழ் சினிமாவில் கலைஞர் அவர்கள் இதுவரை 74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அதில் . 1964 ஆம் ஆண்டு வெளியான ‘பூம்புகார் ‘ படத்தில் வரும் வசனங்களை நம்மால் இன்று வரை மெய்சிலிர்க்க வைக்கும். சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலனை தழுவிய படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் கண்ணகியாக பழம்பெரும் நடிகை விஜயகுமாரி நடித்திருந்தார். அந்த படத்தில் கோவலனை கொன்றபின் அரசனிடம் கண்ணணி முறையிடம் காட்சி இன்றுவரை காலத்தால் அழியாத ஒரு காவியம் தான்.

பூம்புகார் படம் வெளியாகி 54 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் தான் பேசிய கலைஞரின் வசனம் குறித்து நினைவுகூர்ந்துள்ளார் நடிகை விஜயகுமாரி. சமீபத்தில் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அந்த படத்தில் (பூம்புகார் ) கலைஞரின் வசனத்தை பேச நான் முதலில் மிகவும் பயந்தேன். அந்த படத்தை இயக்கிய நீலகண்டனிடம், கலைஞருக்கு முன்னால் எப்படி இந்த நீளமான வசனத்தை பேசுவதென்று தெரியவில்லை அவர் வெளியே போனால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

vijayakumari

உடனே எனது அருகில் வந்த கலைஞர், ‘என்னமா நான் வேணுன்னா வெளிய போயிடட்ட ‘ என்று கூறினார். பின்னர் என்னிடம், கண்ணகியாக நடிக்கிற பயப்பட கூடாது என்று கூறி எனக்கு தெம்பூட்டினார். அதே தெம்பில் நானும் அந்த காட்சி நன்றாக வரவேண்டும் என்று சத்தம் போட்டு அந்த வசனத்தை பேசி முடித்தேன்.கலைஞரும் என்னை பாராட்டி சென்றார்.

வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, முந்தைய ஷாட்டில் பேசிய வசனத்தின் பிற்பகுதியைப் பேசி, அதனுடனேயே அடுத்துப் பேச வேண்டிய புதிய வசனத்தையும் சேர்த்துப் பேசுவது என் வழக்கம். அதனால் மிகவும் சிரமப்பட்டு அந்தப் படத்தில் வசனங்களைப் பேசி நடித்தேன். அதனால் ஒருமுறை என் தொண்டையில் ரத்தம் வந்துவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் படத்தில் நடித்தேன். `நாங்கள் கண்ணகியை நேரில் பார்த்ததில்லை. நீங்கள்தான் நிஜ கண்ணகி என நினைத்துக்கொண்டிருக்கிறோம்’ என மக்கள் பாராட்டியதுதான் அந்தப் படத்தினால் எனக்குக் கிடைத்த பெரிய புகழ். என்று நடிகை விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.