நடிகை விந்தியாவிற்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – அதுக்கு அவர் கொடுத்த பதிலடிய பாருங்க.

0
1521
vin

தமிழ் நாட்டில் உள்ள காட்சிகள் காலம் காலமாக தங்களது கட்சியில் சினிமா பிரபலங்களை நட்சத்திர பேச்சாளர்களாக வைத்து வருகின்றனர். அந்தவகையில் அ தி மு கவில் பிரபல சினிமா டைரக்டருமான ஆர்.வி.உதயகுமார், நட்சத்திர பேச்சாளர் வி.எம்.சுப்புராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் லியாகத் அலிகான், நடிகர்கள் மனோபாலா, ரங்கநாதன், அனுமோகன், பேச்சாளர்கள் பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி, ஆர்.சுந்தர்ராஜன், அஜய்ரத்தினம், வெண்ணிற ஆடை நிர்மலா, கஞ்சா கருப்பு, குண்டு கல்யாணம், நடிகர் வையாபுரி, ரவிமரியா, சிங்கமுத்து, தியாகு, சரவணன், ஜெயதேவி, கவிஞர் முத்துலிங்கம், விஜய் கணேஷ்

Image

போண்டா மணி, கலைப்பிரிவு இணைச்செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் போன்ற பலர் அ தி மு கவில் நட்சத்திர பேச்சாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை விந்தியாவுக்கு ஒருவர். தமிழில் ரகுமான் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விந்தியா.சங்கமம் படத்திற்கு பின்னர், திருநெல்வேலி, மகளிர்காக கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், சங்கமம் திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு வேறு எந்த தெரிய படமும் வெற்றிப்படமாக அமையவில்லை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் அந்த சஸ்பன்ஸ் நடுவர்கள் இவங்க ரெண்டு பேர் தானா ? இதுக்கா இவ்ளோ பில்ட்டப்பு.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி தீவீர அ தி மு க பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். அரசியல் களம் என்றால் அதற்கு சர்ச்சைக்கு என்றும் பஞ்சாமிருந்தது இல்லை. அந்த வகையில் சமீபத்தில் சிலர் நடிகை விந்தியாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து ஷாக்கான விந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்ணீர் அஞ்சலி புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,  “உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி  போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement