பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் அந்த சஸ்பன்ஸ் நடுவர்கள் இவங்க ரெண்டு பேர் தானா ? இதுக்கா இவ்ளோ பில்ட்டப்பு.

0
1807
BB
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

என்னதான் பல ரியாலிட்டி ஷோ வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக்கொள்ளும் வகையில் விஜய் டிவியிடம் வேறு எந்த ரியாலிட்டி ஷோவும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விஜய் டிவி துவங்க இருக்கிறது.

இதையும் பாருங்க : சலுகைக்காக மாலத்தீவுக்கு படையெடுத்த நடிகைகள் – இனி தயவு செய்து வாராதீங்கனு கும்பிடு போட்ட Maldives அரசு. என்ன காரணம் தெரியுமா ?

- Advertisement -

சரி, என்ன நிகழ்ச்சி ? நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் ? என்ற கேள்வி எழுகிறதா ? வேறு ஒன்றும் புதுமையான நிகழ்ச்சி இல்லை. விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ் ஜோடி’ என்று பெயர் வைத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதுவரை சோம், கேபி, ஆஜித், ஷிவானி, ஜூலி, சென்றாயன், மகத், ஷாரிக், பாத்திமா பாபு, மோகன் வைத்யா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உறுதியாகியுள்ளார்ள். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று கூட வெளியானது. அந்த ப்ரோமோவின் இறுதியில் நடுவர்கள் யார் என்பதை சொல்லாமல் ட்விஸ்டோடு முடிந்தனர். அது வேறு யாரும் இல்லை இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகர் ஜீவாவும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement