செத்து பொழச்சி வந்திருக்கேன் – அறுவை சிகிச்சைக்கு பின் லோகேஷ் அளித்த முதல் பேட்டி.

0
2121
lokesh
- Advertisement -

ஆதித்யா சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ். இவர் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான், ஜாம்பி என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு முதல் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. இன்னும் ஒரு அறுவை சிகிக்சை இருக்கிறது.

-விளம்பரம்-

எனக்கு முதல் ஆபரேஷன் முடிந்து பத்து நாட்கள் வரைக்கும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் பிளட் பிரஷர் அதிகமாக இருந்தால் தான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நினைத்தேன். அப்புறம் தான் எனக்கு நடந்ததை சொன்னார்கள். மூளையில் ரத்தம் கட்டி இருந்ததற்காக எனக்கு ஆபரேஷன் பண்ணினார்கள்.அப்போது மூலையில் இருந்த ஸ்கல்லை எடுத்திட்டு தான் ஆபரேஷன் பண்ணாங்க.

- Advertisement -

இப்போ அந்த ஸ்கல்லை வைப்பதற்கு திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டுமாம்.அதற்கு பிறகு நான் நல்ல ஆகிவிடுவேன் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னுடைய முகத்தோற்றம் கொஞ்சம் மாறி தான் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.இந்த நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக லோகேஷ் பாப்பிற்கு 5 லட்ச ரூபாய் தேவை படுகிறதாம். இதனால் மக்களிடம் உதவி கேட்டுள்ளனர் லோகேஷ் பாப்பின் குடும்பத்தினர்.

ஏற்கனவே, லோகேஷ் பாப்பிற்கு விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் பண உதவியை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement