வர்மா படத்தின் டீசரை விட இது செமயா இருக்கு.! ஆதித்யா வர்மா படத்தின் டீஸர் இதோ.!

0
1549
Adithya-Varma
- Advertisement -

தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for adithya varma

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை முதலில் இருந்து எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்த படத்தின் உரிமையை பெற்றுள்ள e4 நிறுவனம்.

- Advertisement -

பாலா இயக்கி முடித்துக் கொடுத்த ‘வர்மா’ படம் தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்கவில்லையாம், அதனால் வேறு நடிகர், இயக்குனருடன் படம் மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ‘வர்மா’ கைவிடப்படிருக்கலாம் என செய்திகள் பரவியது.

தற்போது இந்த படத்தை ‘ஆதத்யா வர்மா ‘ என்ற பெயரில் மீண்டும் எடுத்துள்ளனர். இந்த படத்தினை அர்ஜுன் ரெட்டி’படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டியின் துணை இயக்குனர் கிரிசய்யா தமிழில்இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

முதலில் வெளியான ‘வர்மா’ படத்தின் டீசரை விட இந்த படத்தின் டீஸர் அருமையாக ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், ‘அர்ஜுன் ரெட்டி ‘ படத்தில் வரும் அதே பிஜிஎம் -யை இந்த படத்தின் டீசரில் பயன்படுத்தியுள்ளதால் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீ-மேக்கை பார்ப்பது போலவே இருக்கிறது.

Advertisement