சத்தமில்லாமல் எளிமையாக சித்தார்த்-அதிதி ராவ் திருமணம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த ‘சித்தா’ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான நபர் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார். அதிலும் இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி இருக்கிறார்.
அதிதி ராவ் குறித்த தகவல்:
இதனிடையே இவர் மணிரத்னம் பட நடிகை அதிதி ராவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அதிதி ராவ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு மஹா சமுத்திரம் என்ற படத்தில் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் இருந்தே இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது. ஆனால், இதை இருவரும் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள்.
சித்தார்த்- அதிதி ராவ் காதல்:
மேலும் , சித்தார்த்- அதிதி ராவ் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள். அதோடு அடிக்கடி இருவரும் டேட்டிங் சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து வந்தனர்.
அப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால், இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவோ, காதலிப்பதாகவோ குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
சித்தார்த்- அதிதி ராவ் நிச்சயதார்தம்:
தெலுங்கானாவில் உள்ள கோவிலில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் ஷேர் செய்ய விரும்பாததால் இவர்களுடைய நிச்சயதார்த்தம் பற்றியும் பெரிதாக தெரியவில்லை. அதற்குப் பின் இவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்திருந்தார்கள். பலரும் வாழ்த்து தெரிவித்து திருமணம் குறித்து கேட்டு இருந்தார்கள் .
சித்தார்த்-அதிதி திருமணம்:
இந்த நிலையில் சித்தார்த்-அதிதி திருமணம் இன்று நடந்து இருக்கிறது. அதிதி உடைய முன்னோர்கள் வனர்பதி ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள். அதனால் சித்தார்த் மற்றும் அதிதி உடைய திருமணம் அவர்களுடைய முன்னோர்களால் கட்டப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு பழமையான வனர்பதி கோயிலில் தான்
பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் சிலர் தான் கலந்திருந்தார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.