ஷிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை புகைப்படத்துடன் உறுதி செய்த மைனா நந்தினி.

0
2679
myna
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் சீரியல் நடிகை ஷிவானி கமிட் ஆகி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இதே படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

இதையும் பாருங்க : பஜாரி மாதிரி பேசின ஈஸ்வரிக்கும், ஹஸ்கி வாய்ஸ்ல பேசின மாயாக்கும் டப்பிங் கொடுத்தது இந்த ஒருத்தர் தான்.

- Advertisement -

மாஸ்டர் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.இந்த தகவல் வெளியானதில் இருந்தே விஜய் சேதுபதிக்கு ஷிவானி ஜோடியா என்று பலர் கேலி செய்தனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குல் இந்த படத்தில் மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் கமிட் ஆக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அது வேறு யாரும் இல்லை விஜய் டிவி மைனாவும், பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரியும் தான். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி லோகேஷ் கனகராஜ்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement