மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸ்சுடன் காட்டிற்குள் செல்லப்போகும் ரஜினி. வீடியோ உள்ளே.

0
1189
rajini-bear-grylls
- Advertisement -

பிரபல தொலைக்காட்சியான டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பேர் கிரில்ஸ். காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும் காடுகளில் கிடைத்ததை உண்டு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற யுத்தியை இந்த நிகழ்ச்சியில் காட்டினார் பேர் கிரில்ஸ். அதுமட்டுமல்லாமல் பாம்பு, தேள். புழுக்கள் என்று கண்ணில் தென்பட்டதை எல்லாம் பச்சையாகவே சாப்பிட்டு நமது முகத்தில் சலிப்பை ஏற்படுத்தினாலும் இந்த நிகழ்ச்சி பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது. அதே போல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்திய பிரதமர் மோடி பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டா.ர் அப்போது வெளியான சில புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். மைசூர் மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் மூன்று நாட்கள் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : என் தெனவுட்டு பிரச்சன இல்ல, உங்ககிட்டதா. கிளாமர் லுக்கிற்கு ஷாலு ஷம்மு போட்ட வரிகள்.

- Advertisement -

இதன் மூலம் மோடியை தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டு உள்ள ரஜினி மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், பேர் கிரில்ஸுடனான ரஜினியின் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அதன்பிறகு, அடுத்தகட்டம் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் விமானம் மூலம் ரஜினி பந்திபூர் வனப்பகுதிக்கு சென்றடைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதே போல பேர் கிரில்ஸ் குழு நேற்று (ஜனவரி 27) பண்டிபூர் வந்தடைந்த விடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement