மீண்டும் ரஜினி உடன் மோதும் அஜித். அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

0
769

தமிழ் சினிமா உலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித். தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறகு அடுத்ததாக இருப்பவர் அஜித் தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஜித். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆவார். சமீப காலமாகவே அஜித் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளது. கொரோனா பிரச்சினை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தல அஜித்தின் வலிமை படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துடன் மோத இருப்பதாக சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

மேலும், இந்த படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட படம், அஜித்தின் விசுவாசம் திரைப்படம் பொங்கல் தினத்தன்று தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அப்ப அடுத்த பொங்கலுக்கு செம ட்ரீட் தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement