விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. அந்த நிகழ்ச்சியை விட கடந்த சில மாதத்திற்கு முன்னர் பொல்லாசியில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் பெண் கதறிய குரலை கேப்ரில்லா டிக் டாக் செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஐரா படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொள்ள போகிறார். இவர்களின் திருமண நிச்சயம் சமீபத்தில் நடந்தது. இதுகுறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் கேப்ரில்லா ‘ என்னோடைய துறையில் இருபவர் தான் என்னை நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஆகாஷ் சினிமோட்டோக்ராபராக உள்ளார். எனது நடிப்பை பாராட்டையும் செய்வர், அதே சமயம் ஏதாவது குறை இருந்தாலும் சொல்லுவார். அவரை திருமணம் செய்ய நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.