நினைத்த அதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா ராயிடம் காதலை சொன்னேன் – அபிஷேக் பச்சன்.

0
13310
- Advertisement -

தமிழ் திரையுலகில் 1997-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘இருவர்’. இந்த படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய ரோலில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இது தான் நடிகை ஐஸ்வர்யா ராய் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

-விளம்பரம்-
Flashback Friday: 11 years ago, Abhishek and Aishwarya Rai ...

இதனைத் தொடர்ந்து ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தின் ‘ஜீன்ஸ்’, ‘தல’ அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘சீயான்’ விக்ரமின் ‘ராவணன்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘எந்திரன்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதுவரை தமிழில் நடித்த அனைத்து படங்களிலுமே இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த, நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராயிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து ‘தாய் அக்ஷர் பிரேம் கே, குச் நா ககோ, தூம் 2, குரு, ராவன், சர்கார் ராஜ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணமாகி இன்றோடு (ஏப்ரல் 20-ஆம் தேதி) 13 ஆண்டுகள் ஆகி விட்டது.

-விளம்பரம்-

தற்போது, இவர்களின் திருமண நாளை முன்னிட்டு நடிகர் அபிஷேக் பச்சன் எப்போது எங்கு வைத்து ஐஸ்வர்யா ராயிடம் தன் காதலை சொன்னார் என்று அவரே மீடியாவில் தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில் “நியூயார்க்கில் ஒரு படத்துக்கான படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த ஹோட்டலின் பால்கனியில் நின்று கொண்டு, ஒரு நாள் இதே இடத்தில் என் காதலியுடன் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பின், சில ஆண்டுகளுக்கு பிறகு ‘குரு’ படத்தின் பிரீமியர் ஷோவிற்காக சென்றிருந்த போது, அதே ஹோட்டலின் பால்கனியில் ஐஸ்வர்யா ராயையும் உடன் அழைத்துச் சென்றேன். அங்கு வைத்து தான் அவரிடம் நான் எனது காதலை சொன்னேன்” என்று அபிஷேக் பச்சன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement