என்னுடைய காதலியை நினைத்து உற்சகமாக இருக்கிறேன். பொன்னியின் செல்வன் பட நடிகைக்கு பிரபலம் போட்ட பதிவு.

0
17330
maniratnam
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். இயக்குனர் மணிரத்னம் தற்போது நீண்ட நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். 

-விளம்பரம்-

கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார். தற்போது வரை இந்த படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி மற்றும் சிம்பு மட்டும் கமிட் செய்யப்ட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.  மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : சொந்த வீடு இருக்க வாடகை அபார்ட்மன்டுக்கு சென்ற ரன்பீர்-தீபிகா. வாடகை மட்டும் இவ்வளவாம்.

ஆனால், இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது ஆனால் அந்த போஸ்டரில் உம் இந்த படத்தில் பணிபுரியும் டெக்னிகல் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே வெளியாகி இருந்தது இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.அதனை அருவி பட நடிகை அதிதி பாலன் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அதிதி பாலன் என்னுடைய காதலி ஐசு இந்த ஆண்டினை சிறப்பாக துவங்க இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு மூலம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement