சொந்த வீடு இருக்க வாடகை அபார்ட்மன்டுக்கு சென்ற ரன்பீர்-தீபிகா. வாடகை மட்டும் இவ்வளவாம்.

0
33973
deepika
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருகிறார் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். பின் பல படங்களில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை தீபிகா படுகோனின் கணவரும் ஆவார். நடிகை தீபிகா படுகோன் அவர்கள் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் பிரபல அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டை 7.25 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for deepika apartment

- Advertisement -

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் பியுமொண்ட் என்னும் அபார்ட்மெண்ட் இருக்கிறது. இது மும்பையில் மிக பிரபலமான அபார்ட்மெண்ட் ஆகும். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த அபார்ட்மெண்ட்டில் தான் நடிகர் ரன்வீர் சிங் அவர்கள் ஒரு ப்ளாட்டை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். இதில் 33 வது மாடியில் நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டை கடந்த 2010 ஆம் ஆண்டில் சுமார் 16 கோடிக்கு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தீபீகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் தங்களின் படங்களில் பிசியாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா வீடு இருக்கும் அதே அபார்ட்மெண்டில் தான் நடிகர் ரன்வீர் வீடு ஒன்றை மூன்று வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து இருக்கிறார். முதல் இரண்டு வருடங்களுக்கு மாத வாடகையாக ரூ.7.25 லட்சம் கொடுத்து உள்ளார். கடைசி வருடம் மாதம் ரூ. 7.97 லட்சம் வாடகையாக கொடுத்து உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for deepika ranveer

அது மட்டும் இல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்றும் கூறுகிறார்கள். இது குறித்து பல கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். தற்போது நடிகர் ரன்வீர் சிங் அவர்கள் “83”, “சூர்யவனாஷி” என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதே போல நடிகை தீபிகா படுகோன் அவர்கள் ‘சப்பக்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.

Advertisement