நிறைமாத கர்ப்பத்துடன் குத்து குத்து டான்ஸ் போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யாவின் வீடியோவும், பதிவும் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்கிறது. சினிமா படங்களைவிட சின்னத்திரை சீரியல்கள் தான் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. மேலும், சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் மிக பிரபலமாகி வருகிறார்கள். சினிமா நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கேரியரை தொடங்கினார். பின் விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து நடன கலைஞராகவும் பல மேடைகளில் ஐஸ்வர்யா நடனமாடி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடனமாடியுள்ளார். இந்த பிரபலத்தின் மூலம் இவர் சீரியல் நடிகையாக மாறினார்.
ஐஸ்வர்யா பிரபாகரின் சின்னத்திரைப்பயணம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c என்ற தொடரில் ஐஸ்வர்யா பிரபாகர் நடித்து அசத்தியிருப்பார். அதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், இவர் விஜய் டிவி மட்டுமில்லாமல் சன் டிவி உள்ளிட்ட பல சேனல் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி இவர் சீரியல்களில் நடித்து கொண்டு இருக்கும் போதே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களையும் இவர் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். பின் ஐஸ்வர்யா பிரபாகர் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
ஐஸ்வர்யா பிரபாகரின் குடும்பம்:
இவருக்கு கல்கி பிரியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. 2021ல் குழந்தை பிறந்தது. திருமணத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா குடும்பம், குழந்தை என்று கவனம் செலுத்தியதால் மீடியாவில் இருந்து விலகினார். இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யா மகளிர் தினத்தை ஒட்டி தன்னுடைய கர்பகால பெண்கள் ஆரோக்கியம் குறித்து அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டு கூறியிருப்பது, இந்த வீடியோவை பார்க்கும் போது நீங்கள் கொடுக்கும் அதிர்ச்சி, ஆச்சரியமான எதிர்வினையை முழுவதுமாக புரிந்து கொள்ள முடிகிறது.
மகளிர் தினத்தை ஒட்டி ஐஸ்வர்யா பதிவிட்ட பதிவு:
ஏனெனில் நம் அனைவருக்கும் கர்ப்பம் பற்றிய சொந்த யோசனை உள்ளது. செய்யக்கூடாதவை, கற்பிதங்கள், பயம், அனுமானங்கள் ஆகியவை இதில் பல குழப்பங்கள் வழிவகுக்கின்றன. நான் வித்தியாசமாக இல்லை. எனக்கும் இவை அனைத்தும் கலந்த உணர்வுகள் இருந்தன. ஆனால், நான் உண்மையில் கர்ப்பமாக இருந்தபோது நான் எவ்வளவு சந்தேகம் கொண்டிருந்தேன் என்பதை என்னால் அறிய முடிந்தது. எனது வாழ்க்கை முறையை தொடர என்னை தெளிவாக விளக்கி ஊக்கப்படுத்திய எனது மருத்துவருக்கு முதல் நன்றி. நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடன கலைஞராக இருந்தேன். நான் கர்ப்பமாக இருந்தபோது மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கொண்டிருந்தேன். எனவே திடீரென்று எதுவும் செய்யாமல் படுக்கைக்கு மாறுவதில் அர்த்தம் இல்லை.
வைரலாகும் ஐஸ்வர்யா நடனமாடிய வீடியோ:
எனவே எனது மருத்துவரின் ஆலோசனையை ஏற்று நடனம், உடற்பயிற்சி, வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், நான் மேலே உள்ள அனைத்தையும் செய்யும் ஒவ்வொரு முறையும் அதிக ஆற்றலை உணர்ந்தேன். சுறுசுறுப்பான தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஐகியூ உள்ளது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. இது எனது முதல் குழந்தை. அதனால் நான் குறிப்புகள் வழங்கவில்லை. அனைத்து அழகான குட்டி பெண்கள், அழகான பெண்கள், சக்திவாய்ந்த அம்மாக்கள், வலிமையான மனைவிகள், குறும்புக்கார சகோதரிகள், புத்திசாலி பாட்டி அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவருடைய பதிவும், கர்ப்ப காலத்தின்போது நடனமாடிய வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாசிட்டிவாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.