ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராத படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகும் வீடியோ.

0
5954
aiswaryarai
- Advertisement -

வருடம் வருடம் புதிது புதிதாக எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் அவர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னனி நடிகையாக நிலைத்து இருந்தவர். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் அழகு பதுமையாகவே வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் நடித்து வெளிவராத படத்தின் காட்சி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு ‘ராதேஷ்யம் சீதாராம்’ என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் நடனம் ஆடி உள்ளார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் அதிக மேக்கப்பில் பாரம்பரிய உடையில் நிறைய நகைகளை அணிந்து கொண்டும், சுற்றி இருப்பவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே பணியாற்றுவது போல் உள்ளது. தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராயின் அழகையும், அவரது முகபாவனைகளையும் பார்த்து ரசிகர்கள் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

சுனில் ஷெட்டி தான் இந்த படத்தின் கதாநாயகன். இயக்குனர் அனீஸ் பஸ்மி தான் இந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஒரு குரங்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தில் நாயகன், நாயகி இருவருமே இரட்டை வேடங்களில் நடித்தனர் என்று கூறப்படுகிறது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

.

Advertisement