அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் டிக் டாக் பெண். வைரலாகும் வீடியோ.

0
1759
aishwaryarai
- Advertisement -

என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-
Aishwarya Rai's lookalike video goes viral on social media

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் ஒருவரின் டிக் டாக் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இருந்து ஒரு டயலாக்கை அந்தப் பெண் டிக் டாக் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அந்தப் பெண் ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார் என்று புகழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், ஒரு சில பேர் இவர் ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கருத்துக்களை பதித்து வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போலவே ஒரு பெண் இருப்பதாக சோசியல் மீடியாவில் புகைப்படம் ஒன்று வைரலாகி இருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாகி கொண்டிருக்கிறது. இன்றைய இளைனர்கள் படங்களின் வசனங்களையும், காட்சிகளையும் அதே போல் தங்களை பாவித்துக் கொண்டு நடித்து வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சேருகின்றனர்.

சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமடைந்த பல பேர் தற்போது சினிமா துறையில் நடித்து வருகிறார்கள். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

-விளம்பரம்-
Advertisement