என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் அம்ருதா என்ற பெண் ஒருவரின் டிக் டாக் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்தது .
நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இருந்து ஒரு டயலாக்கை அந்தப் பெண் டிக் டாக் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அந்தப் பெண் ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார் என்று புகழ்ந்து வந்தனர். அந்த வீடியோ வைரலானதால் இவருக்கு தற்போது சினிமாவில் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலையாளத்தில் ஷேய்க் அப்சல் தயாரிப்பில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் ‘பிக்காசோ’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்னே விளம்பரத்திலும் மற்றும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் விரைவில் தமிழிலும் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்ப்பாகப்படுகிறது.