க/பெ ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமே என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Advertisement

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருந்த படம் “டிரைவர் ஜமுனா”. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் பிக் பாஸ் மணிகண்டன், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான். அதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்கி இருக்கிறார். லட்சுமி பிரியா, மீமீ கோபி, கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லீ, ஷாரா, சுனில் ரெட்டி என பலரும் நடித்திருக்கின்றார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபர்ஹானா.

Advertisement

காவல் நிலையத்தில் புகார் :

பர்கானா திரைப்படத்தின் டீசர் காட்சியில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்கிறார். இஸ்லாமிய பண்பாடு கலாச்சத்திற்கு எதிராக இந்த படம் இருக்கிறது. இதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஓடி டி தளத்தில் சமீபத்தில் வெளியான புர்கா படத்தையும் இணைதளத்திலிருந்து நீக்க வேண்டும். புர்கா திரைப்படத்தின் இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஃபர்ஹானா படத்தின் மீது புகார் அளித்திருக்கிறார்.

Advertisement

ஃபர்ஹானா படம்:

இந்த படத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக மத கட்டுப்பாட்டுகளை எல்லாம் கடந்து வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இந்தப் படம் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் ப்ரோமோஷன்காக மும்முரமாக படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்று அடித்து இருக்கிறார். அதில் அவர், வாரம் வாரம் என்னுடைய படங்கள் வெளியாகிறது என்று சொல்கிறார்கள். படம் வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது என் கையில் இல்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி:

கடந்த வருடத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் மட்டும் தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு என்னுடைய படத்திற்கு எந்தவித விருதும் கிடைக்கவில்லை. வருடம் வருடம் பல விருதுகள் நான் வாங்கி இருக்கிறேன். இந்த வருடம் விருது விழாக்களின் அழைப்பு கூட வரவில்லை. குறிப்பாக க/பெ ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது. மேலும், இந்த ஃபர்ஹானா படம் என்னுடைய திரை வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. சில படங்கள் மனதிற்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும். அப்படித்தான் இந்த படம் எனக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு எங்களுடைய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு. அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்.

Advertisement