இந்த நடிகருடன் நடிக்க வேண்டும் ! இதுதான் என் ரொம்ப நாள் ஆசை ! ஐஸ்வர்யா ராஜேஷ் !

0
1657
Aishwarya Rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார்.தனது பயணத்தை சன் டிவி தொகுப்பாளராக ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க முட்டை படத்திற்கு முன்பு சிறு சிறு கதா பாத்திரத்தில் நடித்தார் அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் ரம்மி படத்தில் நடித்துள்ளார்.

Aishwarya rajesh

இவரின் நடிப்பு திறனை பார்த்தே தனுஷ் இவரை காக்க முட்டை படத்தில் நடிக்க இயக்குனரிடம் பரிந்துரை செய்தாராம். ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் என்றால் மிகவும் பிடிக்குமாம் ஆனால் அவருடன் நடிக்க வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எங்கிக்கொண்டே இருந்தாராம். அந்த ஆசை தற்போது வட சென்னை படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது என்று ஆனந்தம் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வட சென்னை படத்தில் ஒரு குப்பத்து பெண் ரோலில் நடிக்கிறேன் ஏற்கனவே காக்க முட்டை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்ததால் இந்த படத்தில் நடிக்க கொஞ்சம் சௌகரியமாக உள்ளது. மேலும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பேன் என்று என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை வட சென்னை படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கவுள்ள செக்க சிவந்த வானம் படத்திலும் நடிக்கிறேன் என்று பூரிப்புடன் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Dhanush

dhanush

வட சென்னை படத்தில் முதலில் அமலா பால் தான் நடிக்கவிருந்தாராம் ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படத்தில் அவர் நடிவில்லையா.அதன் பின்னர் சமந்தவை நடிக்க வைக்க முடிவுசெய்தனராம் ஆனால் அதுவும் நடக்காமல் போகவே இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்களாம்.