உண்மையாக காதலித்தேன், ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார் – ஐஸ்வர்யா ஓப்பன் டாக்

0
12212
Aishwarya rajesh actress

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது மூன்று காதல் கதையை பற்றி பிகிர்திருந்தார்.அதனை தொடர்ந்து தற்போது அவருடன் தர்மதுரை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தான் வாழ்வில் காதலித்த நபர்களை பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.

Aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரத்திம் ,வட சென்னை படங்களில் தற்போது நடித்து வருகிறார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது இளமை கால காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்”நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார்.கண்டிப்பாக அவர் தற்போது பீல் செய்வர் “என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

அதன்பின் நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை 6 வருடங்களாக காதலித்து வந்தேன். ஆனால் உங்களுக்கே தெரியும் இந்த சினிமா உலகில் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்று.அதனால் எங்களுக்குள் சில கருத்து வெறுபாடுகள் ஏற்பட்டு நாங்களே எங்கள் காதலுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டோம்.இந்த இரண்டு நபருக்கு பிறகு நான் யாரையும் காதலிக்கவில்லை.ஆனால் எனது மூன்றாவது காதல் தான் கடைசியாக இருக்கும் அதுவே நிரந்தரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்”என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.