எல்லாரும் சோர் இல்லாமல் கஷ்டபடறாங்க,இதான் முக்கியமா ? விளம்பரம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்.

By Rajkumar · 5/4/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

https://www.instagram.com/p/B-lv--bJtOU/

நடிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தில்நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : நடுத்தர ஆண்டி என்று கமன்ட் செய்த நபருக்கு பிக் பாஸ் 3 நடிகை கொடுத்த பதில்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில்நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார் .தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் முடங்கி வருகின்றனர். பல்வேறு பிரபலங்களும் தங்களது ரசிகர்களின் சலிப்பை போக்க ஏதாவது விடீயோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஊரடங்கையும் மீறி இரவில் ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றிய நடிகைக்கு ஏற்பட்ட விபத்து. தற்போது அவரின் நிலை ?

அதே போல பெரும்பாலான நடிகைகள் தங்கள் வீடுகளில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அப்டேட்டுகளை அடிக்கடி சொல்லிகொண்டே வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வ்ர்யா ராஜேஷ் வித்யாசமான காபி செய்வது எப்படி என்று ஒரு பொருளை விளம்பரம் செய்யும் பாணியில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

கொரோனாவால் மற்ற நடிகைகள் உடற்பயிற்ச்சி விடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள் என்று பதிவிட்டு வரும் நிலையில் இப்படி ஒரு நிலையிலும் பொருட்களின் விளம்பரத்தை செய்துள்ள ஐஸ்வர்யாவை ரசிங்கர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த விளம்பரத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றும் இதற்கு எவ்ளோ அக்கா வாங்கின என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full