நடுத்தர ஆண்டி என்று கமன்ட் செய்த நபருக்கு பிக் பாஸ் 3 நடிகை கொடுத்த பதில்.

0
25573
Sherin
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை ஷெரின். ‘அழகிய அசுரா’ என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தார். இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரையுலக நடிகையுமானர். 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற நடிப்பில் மூலம் தான் ஷெரின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு அழகான நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .

-விளம்பரம்-

மேலும், நடிகை ஷெரின் அவர்கள் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க என்ற படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இடையில் ஷெரினை ரசிகர்கள் முற்றிலும் மறந்திருந்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : ஊரடங்கையும் மீறி இரவில் ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றிய நடிகைக்கு ஏற்பட்ட விபத்து. தற்போது அவரின் நிலை ?

- Advertisement -

எப்போவுமே ஷெரின் அவர்கள் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில் நடிகை ஷெரின் அவர்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “My many moods!” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த ஒவ்வொரு புகைப்படங்களும் பார்ப்பதற்கு வித்தியாசமான கோணத்தில் எடுத்து போட பட்டு இருந்தது. இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

Fan calls Bigg Boss fame aunty, Actress bold response goes viral ft Sherin Shringar

-விளம்பரம்-

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் கூறியிருப்பது, நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பார்ப்பதற்கு அப்படியே ஆன்ட்டி மாதிரி இருந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் உண்மையாலுமே மிகவும் அழகாக உள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய அழகு கூடிக்கொண்டே இருக்கிறது. என்ன தான் செய்கிறீர்கள் உங்களுடைய அழகு கூடுவதற்கு? நீங்கள் பார்ப்பதற்கு அப்படியே தேவதை போன்று அழகாக உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து உள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிறிய இடைவெளிக்கு பிறகு ஷெரின் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷெரின் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியும், அனைவரிடமும் அன்பு பகிர்ந்து இருந்தார் என்பதால் பிக்பாஸ் குழு ‘பெஸ்ட் படி(best buddy)’ என்ற விருதையும் வழங்கியது. பிக் பாஸ் மூலம் ஷெரின் மீண்டும் இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை ஷெரின் பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமனாக மாறி இருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிற்கு பிறகு இவர் மீண்டும் உடல் எடை குறைந்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார். தற்போது நடிகை ஷெரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நடிகை ஷெரின் மீண்டும் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement