கோப்ரா படம் ப்ளாப் ஆனதற்கு இது தான் காரணம் என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல், தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடிய நடிகர் விக்ரம். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி இருந்த கோப்ரா படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார்.
கோப்ரா படம்:
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்தது இந்த படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், ஆனந்தராஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்காக விக்ரம் பல கெட்டப் போட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, கோப்ரா படம் என்னுடைய கதையே இல்லை.
What the actual fuck? 😳 dei @/7screenstudios enna da idhu?? Man got mentally destroyed and took the blame for all the chaos that happened around #Cobra pic.twitter.com/3ou6hkcBuM
— Cal D. (@itispascal) August 13, 2024
அஜய் ஞானமுத்து பேட்டி:
நான் ஒரு கதை சொன்னேன். ஆனால், அதை தயாரிப்பாளர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகு அவர் வேறு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க சொன்னார். நானும் அந்த கதைக்கு ஸ்கிரீன் பிளே எல்லாம் எழுதினேன். இருந்தாலும், அதை என்னால் கதையாக மாற்ற முடியவில்லை. அவர் சொன்ன கதையை ஏற்றுக்கொண்டது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதனால் தான் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
தங்கலான் படம்:
தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘தங்கலான்’. கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படம் குறித்த தகவல் :
ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். கடந்த வாரம் முதல் தற்போது வரை இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து விக்ரம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.