விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.
இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார்.
இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தில் ரீமேக் என்பது அனைவருக்கு தெரியும். மேலும், இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரம் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு தற்போது இந்த படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பை வைத்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்னர் யாரும் எதிர்பாராத நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.