நீ கொழந்தமா, இப்படிலா போஸ் வேண்டாம். விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.

0
34107
baby-anikha
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. மேலும், விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்கப் போகிறது என்று பகிரங்கமாக இணையதளங்களில் தகவல் வெளிவந்த போது நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் அப்பாவுடன் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறேன் என்று அதிக சந்தோஷத்தில் கூறி இருந்தார் நடிகை அனிகா.

இதையும் பாருங்க : சொந்த ஊரில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் கட்டிய சூப்பரான வீடு. குவியும் லைக்ஸ்.

- Advertisement -

மேலும், அனிகா அவருடன் இரு படங்களில் மகளாக நடித்ததனாலே என்னவோ அவரை பார்த்தால் எனக்கு அப்பா உணர்வு ஏற்படுகிறது. அவரை நான் “பப்பா” என்று தான் அழைப்பேன் என்றும் கூறி இருந்தார். விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் பேபி அனிகாவின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகவும் மனமுருகி போனார்கள். மேலும், ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.

Image

-விளம்பரம்-

விஸ்வாசம் படத்திற்கு பின்னர் பேபி அனிகா எந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிகா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வளைத்ததில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவை அணிந்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் சற்று கவர்ச்சியாக இருக்கிறார் என்று உணரும் அஜித் ரசிகர்கள் உங்களை குழந்தை போல பார்க்கிறோம் இப்படி எல்லாம் போஸ் கொடுக்காதீர்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Advertisement