கலைஞர் மறைவுக்கு வராத விஜய்! விஜய்யை தொடர்ந்து அஜித் எடுத்த அதிரடி முடிவு.!

0
351
Vijay

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் நேரில் சேரில் சென்று மரியாதையை செலுத்தி வந்தனர். சமீபத்தில் பல்வேறு நடிகர்களும் கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தி வந்தனர்.

kalainjer

ஆனால், நடிகர் விஜய் தற்போது ‘சர்கார் ‘ படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் அவரால் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், கலைஞரின் மறைவிற்கு மரியாதையை செலுத்தும் வகையில் “சர்கார் ” படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனராம். ஏற்கனவே, கலைஞர் அவர்களின் மறைவிற்காக விஜய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,தற்போது அஜித் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது கலைஞர் அவர்களுக்கு அளித்துள்ள மரியாதையாகவே கருதப்படுகிறது.

thala-ajith

sangeetha

சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க ஹைதராபாத் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மருத்துவமணையில் கலைஞரை சந்தித்து விட்டு பின்னர் அவசர அச்சாரமாக “விசுவாசம்” படப்பிடிப்புகளை தொடர மீண்டும் ஹைதராபாத் சென்றிருந்தார் அஜித்.

அதே போல சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகர் விஜய், கலைஞர் அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன் பின்னர், சர்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.