பொன்மனசெம்மலே – அஜித்தை எம் ஜி ஆராக சித்தரித்த அஜித் ரசிகர்கள் (இது நாள தான் அந்த மனுஷன் ரசிகர் மன்றத்த கலச்சாரு போல)

0
1535
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாஸ். தல அஜித்தின் படம் திரையரங்களில் வெளியாகுவது என்று சொன்னாலே போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையைச் சேர்ந்தவர். இறுதியாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்நிலையில் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் வரப்போகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.தல அஜித்தின் பிறந்த நாள் அன்று ரசிகர்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு கமெண்டுகளும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தல அஜித்தின் பிறந்த நாளை திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதோடு சோசியல் மீடியாவில் தல பிறந்தநாளன்று புதியதாக ஹாஸ்டேக் உருவாக்கி பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

இதையும் பாருங்க : நேற்று கூட பேசினார், சேர்ந்து படம் பண்ணலாம்னு சொன்னேன் – கே.வி.ஆனந்த் குறித்து சிம்பு உருக்கம் (ஏற்கனவே இந்த படத்துல சிம்பு நடிக்க வேண்டியது)

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நாளை அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்காங்கே பிறந்தால் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் சிலர் அஜித்தை, எம் ஜி ஆர் போல சித்தரித்து ‘மே 1 2021 ல் பொன் விழா காணும் எங்களின் பொன்மனச்செம்மலே’ என்று அச்சிடபட்டுள்ளது. மேலும், தேசிய நாயகன் அஜித் ரசிகர்கள் – மதுரை என்றும் அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

Image

அஜித்தின் பிறந்தநாளுக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாது என்று போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து தெரிவித்த இருந்த அவர், ,கொரோனா நோயின் இரண்டாம் அலை வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்தஇத்தகைய அசாதரண சூள்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement