சிட்டிசன் மீனா ரோலில் முதலில் கமிட் ஆனது இந்த சீரியல் நடிகைதானம்.! அவரே சொன்ன தகவல்.!

0
12704
Citizen

ஆட்டிட்மேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் அஜித் அப்பா, மகன் என்று இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் மகன் அஜித்திற்கு ஜோடியாக பின்னணி பாடகி வசுந்தரா நடித்திருந்தார்.

Related image

அதே போல பிளாஸ் பேக்கில் வரும் அப்பா அஜித்திற்கு மனைவியாக பிரபல நடிகை மீனா நடித்திருந்தார். ஆனால், மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ தொடரில் நடித்த அபிதா தான்.

இதையும் பாருங்க : தங்கம் வென்று அப்பாவை பெருமை படுத்திய மகன்.! மாதவன் மகன் செய்த சாதனை.! 

- Advertisement -

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. விக்ரமிற்கு சசீயான் என்ற பட்டப்பெயரை கொடுத்ததும் இந்த படம் தான். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிதா.

Image result for thirumathi selvam

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த இவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை சேது படத்திற்கு பின்னர் தமிழில் சீறி வரும் காலை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பினார்.

-விளம்பரம்-

சேது படத்திற்கு பின்னர் சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்க இருந்தார் ஆனால் அந்த பட வாய்ப்பைக் கூட இவர் நிராகரித்து விட்டாராம் அதன் பின்னர் ஏன் அந்த பட வாய்ப்பை மிஸ் செய்தோம் என்று மிகவும் கஷ்டப்பட்டாராம்.

Advertisement