தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

Advertisement

கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது கேப்டனை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

குறிப்பாக ரஜினி, கமல், விஜய் என்று தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கேப்டன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், நேரில் வர முடியாத பல பிரபலங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அஜித் இதுவரை சமூக வலைத்தளங்கள் வாயிளாகவோ தனது மேனேஜர் மூலமாகவோ கேப்டனுக்கு எந்த இராங்கனைகளையும் தெரிவிக்கவில்லை.

Advertisement

பொதுவாக அஜித் எந்த ஒரு பொது நிகழ்விற்கும் கலந்துகொள்வது இல்லை தான். ஆனால், கேப்டன் இறப்பிற்கு கூட அஜித் வராதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஜித் இரங்கல் தெரிவித்தார். மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்து இருக்கறாராம்.

Advertisement

அதே போல அவர் சென்னை வந்ததும் கேப்டன் குடும்பத்தை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டனின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 2.30 மணியளவில் தொடங்கியது. இதனை தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

Advertisement