ஷாலினியின் தங்கை பகிர்ந்த தல வீட்டின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் – அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ள அஜித்தின் மகள்.

0
1129
ajith
- Advertisement -

நாடு முழுவதும் கடந்த 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை படு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், பிரபலங்கள் பலரும் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில் தமிழ் சினிமாவில் அல்ட்டிமேட் ஸ்டாராக இருந்து வரும் அஜித் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது. சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-

அஜித்,ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘அமர்க்களம்’. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை.

இதையும் பாருங்க : படத்தில் தான் குடும்ப குத்து விளக்கு லுக் – நிஜத்தில் பிகினி உடைகளில் தெறிக்கவிடும் சார்பட்டா பட நடிகை.

- Advertisement -

அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும்.

இருப்பினும் அடிக்கடி இவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி அடிக்கடி குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அஜித் வீட்டின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அனோஷ்கா, கண்ணாடி போட்டுகொண்டு அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து காணப்படுகிறார்.

-விளம்பரம்-
Advertisement