முதல்வர் கொரோனாநிதியை தொடர்ந்து சினிமா தொழிலாளர்களுக்கு நிதி அளித்துள்ள அஜித். எவ்வளவு தெரியுமா ?

0
981
ajith
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தமிழ் நாட்டிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிப்பட்டு முதல் ஆக்சிஜன் லோடும் புறப்பட்டுவிட்டது. இது ஒருபுறம் இருக்க, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கி இருந்தார்.

இதையும் பாருங்க : அடங்கப்பா, கனிக்கு இவ்ளோ பெரிய மகள்களா ? ரெண்டு பெரும் ட்வின்ஸ்ஸா. ஒரே மாதிரி இருக்காங்களே.

- Advertisement -

அதே போல ரஜினி மகள் சௌந்தர்யா 1 கோடியும், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் 25 லட்சமும் நிதி அளித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்திருந்தார்.

கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டு இருப்பதால் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக பெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இதை பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கடந்த ஆண்டே நடிகர் அஜித் கொரோனா நிதி அளித்து இருந்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என நிதியுதவி என்று மொத்தம் 1.25 கோடி ரூபாய் அளித்து இருந்தார் என்பது கூறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
Advertisement