காவல்துறையினரிடம் சிக்கிய அஜித் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ – நடவடிக்கை பாயுமா?

0
882
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.

-விளம்பரம்-
Thala Ajith 2016 May 1st Birthday Special Common DP Gallery ...

‘தல’ அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

- Advertisement -

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ‘தல’ அஜித்தின் திரை உலக வாழ்வில் ‘வலிமை’ திரைப்படம் அவருக்கு 60-வது படமாம். ‘வலிமை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து கொண்டிருக்கிறார்.

Ajith Fan Did Palabishegam For Bus

கடந்த மே 1-ஆம் தேதி நடிகர் ‘தல’ அஜித்தின் பிறந்த நாள். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்தார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில், கும்பகோணம் அருகில் இருக்கும் தியாகசமுத்திரம் என்ற கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அஜித்தின் ரசிகர்கள், அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரூ.2000-யித்திற்கு கேக் வாங்கி வெட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஊர் தெருக்களில் தோரணம் கட்டி, பட்டாசு வெடித்து திருவிழா மாதிரி கொண்டாடியிருக்கிறார்கள். அதை ஒரு வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாக இப்போது காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளி வந்திருக்கிறது.

Advertisement