என்னது டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா, கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுங்கள் – அஜித் ரசிகர்கள் புகார்.

0
494
valimai
- Advertisement -

வலிமை படத்தின் டிக்கெட் ரேட்டை குறைக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் புகார் அளித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அஜித் அவர்களின் வலிமை படம் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் வலிமை படத்தில் இணைந்துள்ளது.

-விளம்பரம்-
Image

வலிமை படத்தை வினோத் இயக்கி இருக்கிறார். போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும், படம் ரீலிஸ் ஆகுவதற்கு முன் வலிமைப்படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா இந்த பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள்.

- Advertisement -

இன்று வெளியான படத்தின் ட்ரைலர் :

மேலும், இன்று மாலை 6.30 மணி அளவில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது . ஓர் ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு வலிமை படம் உருவாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் மூலம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள்அடங்கிய படமாகவே தெரிகிறது. மேலும் பொங்கலன்று அஜித்தின் வலிமை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் ஆட்சியரிடம் புகார் :

இந்த நிலையில் வலிமை படத்தை மிகப்பெரிய கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக அஜித் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அஜித்குமார் ரசிகர்கள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்கள். புகாரில் அவர்கள் கூறியிருப்பது, சினிமாவில் பல ஆண்டுகாலமாக தனக்கென ஒரு தனி முத்திரையோடும், உச்ச நட்சத்திரமாகவும் இருப்பவர் அஜித் குமார். இவருடைய வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஒரு டிக்கெட் விலை இவ்வளவா :

கோவை மாவட்டத்திலும் இந்த படத்தை திரையிட உரிமம் பெற்றுள்ள விநியோகஸ்தர்கள் படத்தை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும், 12ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி முதலே அரசு அனுமதியின்றி படத்தை வெளியிடவும், அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தவும் விநியோகஸ்தர்கள் திரைஅரங்கு உரிமையாளர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருகின்றனர். விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் உடன் இணைந்து அரசு விதித்த 120 ரூபாய் டிக்கெட் கட்டணத்தை 1000 ரூபாய் என்று உயர்த்தி வசூலித்து வருகின்றனர்.

Image

டிக்கெட் விலையால் அரசுக்கு இழப்பு :

பொதுவாகவே டிக்கெட் 120 ரூபாய் என்று விற்றாலே நாளொன்றுக்கு சுமார் 2.4 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இதில் 1000 ரூபாய் என்று விற்பனை செய்தால் 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அதன் மூலம் 17 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு விதித்த கட்டணத்தையே வசூலிக்க வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி உள்ளார்கள். இப்படி இவர்கள் அளித்துள்ள புகார் கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதோடு இது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement