GOAT படத்தால் மீண்டும் எழுந்த தல பஞ்சாயத்து, வாயை கொடுத்து மாட்டிய நடிகை – அட, இவங்களும் Nepo கிட் தானாம்

0
289
- Advertisement -

‘கோட்’ படத்தில் விஜயின் மகளாக நடித்த நடிகை அபியுக்தா மணிகண்டனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள். உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியான GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

- Advertisement -

கோட் படம்:

அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, கேப்டன் (AI) என்று பல கேமியோ ரோல்களும் இடம்பெற்று இருக்கிறது. அதுபோக சூர்யாவின் பாடல், ரஜினியின் பாடல், அஜித் வசனம், கமல் பாடல் என்று பல ரெஃப்ரென்ஸ்களை பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட் பிரபு. அந்த வகையில் கிளைமாக்ஸில் விஜய் மற்றும் படத்தில் அவரது மகளாக நடித்த அபியுக்தா இடையே ஒரு காட்சிய இடம் பெற்று இருக்கிறது.

விஜய் – மகள் உரையாடல்:

அந்தக் காட்சியில், நடிகர் விஜய் தனது மகளிடம் நீ யாருடைய பேன் என்று கேட்பார். அதற்கு அவரது மகள் நான் ‘தல’ பேன் தான் என்று கூறியிருப்பார். அப்போது பின்னணியில் அஜித்தின் பிஜிஎம் ஒலிக்கும். அதோடு அங்கு தல தோனியின் CSK மேட்ச் நடந்து கொண்டிருக்கும். அதனால் இந்த படத்தில் ‘தல’ என்று குறிப்பிட்டது அஜித்தையா? இல்லை தோனியா? என்று ரசிகர்கள் குழம்பி வந்தார்கள்.

-விளம்பரம்-

அபியுக்தா பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட நடிகை அபியுக்தாவிடம், இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அது தல தோனியா இருக்கலாம் என்று கூறினார். உடனே அவரிடம், ஆனால் அந்த சீனில் அஜித்தின் மங்காத்தா பிஜிஎம் வருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எல்லாரும் அது யார் யோசிக்கணும் அதற்காக தான் அந்த பிஜிஎம் வைக்கப்பட்டது. அப்போ உங்க சிஎஸ்கே மேட்ச் தானே நடந்துட்டு இருந்தது, அதனால அங்கு குறிப்பிட்டது தல தோனியை தான் என்று கூறி இருந்தார்.

கொந்தளித்த அஜித் ரசிகர்கள்:

அதற்குப் பிறகு, ஆடியன்ஸ்க்கு என்ன தோணுதோ அதை வைத்துக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். அதனால் அஜித்தின் ரசிகர்கள் மீண்டும் கொந்தளித்து, ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவையும் திட்டி வருகிறார்கள். அதோடு அப்படத்தில் விஜயின் மகளாக நடித்த அபியுக்தாவை, நீயும் ஒரு Nepo கிட் தானே என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு, படத்தில் வரும் தல அஜித் தான், அதை குறிக்க தான் தலையோட பிஜிஎம் போட்டோம் என்று கன்ஃபார்ம் செய்திருந்தார்.

Advertisement