அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பங்கள் படையெடுக்கும் இந்த
திரைப்படத்தை பார்க்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் அஜித் ரசிகர்கள் வந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட ,அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் சில நாட்கள் முன்பு வெளியாகின. இதையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள், ரஜினி, அஜித்தின் கட்அவுட்கள், பேனர்கள், தோரணங்களால் களைகட்டின.
பல இடங்களில் ஒரே தியேட்டரில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளதால் திரையரங்கம் விழாக்காலம் பூண்டிருந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டரில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் திரையிடப்படுகின்றது.
மாட்டுப்பொங்கல் என்பதால் அஜித் ரசிகர்கள் தங்களது வீட்டில் தம்பி போல் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை கூட்டிக்கொண்டு விஸ்வாசம் திரைப்படம் பார்க்க வந்தனர். திரையரங்ககுள் காளைகள் செல்ல அனுமதி இல்லை என்பதால் ஜல்லிக்கட்டு காளையை அழைத்துக்கொண்டு ஏமாற்றத்ததுடன் திரும்பிச் சென்றனர்