மாஸ்க் அணிந்து கொண்டு சாலையோர உணவு – அஜித் என்று தெரிந்ததும் இதான் நடந்தது. வைரல் புகைப்படம்.

0
1662
ajith
- Advertisement -

சாலையோரத்தில் இருந்த கடையில் சாப்பிட சென்ற போது ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து ஒரு செமயான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

-விளம்பரம்-

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம வாரணாசிக்கு தனது நண்பர் குழுவுடன் சென்றுள்ளார். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த அஜித் அங்கே அருகில் இருந்துள்ள ஒரு சாலையோர கடை ஒன்றில் நுழைந்து இருக்கிறார். தலையில் தொப்பி மற்றும் முகத்தில் முகக்கவசம் அணிந்திருந்ததால் அஜித்தை முதலில் அடையாளம் தெரியவில்லை. பின்னர் சாப்பிடுவதற்காக முகக் கவசத்தை நீக்கிய போது தான் அந்த கடைக்காரர் அஜித்தை அடையாளம் கண்டுள்ளார். இது குறித்து அந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரி கூறியதாவது:

அவர் எங்கள் கடைக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பனாரஸ் சாட் வகைகள் அனைத்தையும் அவர் ரசித்து சாப்பிட்டார். அவருக்கு அவை மிகவும் பிடித்துப் போனது, அதனால் அடுத்த நாளும் எங்கள் கடைக்கு வந்தார். மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலவே அவரும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட விரும்பினார். உணவு தயாராகும் முறை கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் அந்த கடை உரிமையாளர்.

-விளம்பரம்-
Advertisement